புதிய முறையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் இருக்கும். வாக்காளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல்களைப் பெறுவார்கள். இந்த நோக்கில், தேர்தல் ஆணையம் ECINet எனும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட ஐ.டி தொகுதியை (IT Module) உருவாக்கியுள்ளது. தற்போதுள்ள முறையை மாற்றி, தபால் துறையின் பயன்பாட்டு இணையதள இடைமுகம் (DOP’s API) ECINet உடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் சேவை வழங்கல் மேம்படுவதுடன், தரவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். வாக்காளர்களுக்கு வேகமான மற்றும் செயல்திறனுள்ள தேர்தல் சேவைகளை வழங்குவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். கடந்த நான்கு மாதங்களில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களும் பிற நபர்களும் பயனடையும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை (EPIC) பெறலாம்!! appeared first on Dinakaran.
