நீலகிரி: இந்தியாவிற்கு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; எனக்கு அரசியல் வழிகாட்டி அண்ணன் ஆ.ராசா. நீலகிரியில் மட்டும் 1.20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும், அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் புதுமைப் பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் புதுமைப் பெண் திட்டம். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனடாவிலும் பின்பற்றப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கொரோனா பரவலின் போது பிரதமர் மோடி ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
உ.பி. உள்பட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வில் தாராளம் காட்டும் மோடி அரசு. நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு. மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் நிதி ஒதுக்கவில்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றும் முதலமைச்சர். மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் பாசிச பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவிற்கு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
The post இந்தியாவிற்கு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை appeared first on Dinakaran.