மூத்த நடிகரும், இயக்குனருமான கன்னட பாடலாசிரியர் மரணம்

பெங்களூரு: கர்நாடகாவில் வசித்து வந்த மூத்த கன்னட நடிகரும், இயக்குனரும், பாடலாசிரியருமான சி.வி.சிவசங்கர் (90), நேற்று முன்தினம் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கன்னட திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். கன்னட திரையுலகில் சி.வி.சிவசங்கர் ஆற்றிய பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதும், ராஜ்யோத்சவா விருதும் பெற்றுள்ளார். 1962ல் ‘ரத்ன மஞ்சரி’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உதவி இயக்குனராகவும், தயாரிப்பு மேலாளராகவும் கன்னட படவுலகில் அறிமுகமானார். கன்னட மொழி பெருமை குறித்து அதிகமான பாடல்களை எழுதியுள்ள சி.வி.சிவசங்கர், நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார்.

The post மூத்த நடிகரும், இயக்குனருமான கன்னட பாடலாசிரியர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: