இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தரப்பிலும் கடந்த ஆகஸ்டு 9ம் தேதி சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேற்கண்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இதையடுத்து வெளியிடப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவில் எந்தவித பிழையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
The post எஸ்.சி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.