வேலூர் மாநகராட்சியில் மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடிக்க வேண்டும்

* அவகாசம் தாண்டினால், நிதி கிடைக்காது

* ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரி அறிவுறுத்தல்

ேவலூர் : வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அவகாசம் தாண்டினால், நிதி கிடைக்காது என்று ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சாலை, கோட்டை அழகுபடுத்துதல், ேசாலார் பிளாண்ட், பாதாள சாக்கடை மற்றும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள், ஸ்டடி சென்டர், பயோ ைமனிங் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 4 கட்டங்களாக சுமார் ₹600 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

இதுதொடர்பான பணிகளை தமிர்நாடு நகர்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகமான (டுபிட்கோ) நிர்வாக இயக்குனர் அனிஷ் சாப்ரா ஐஏஎஸ், நேற்று வேலூர் மாநகராட்சியில் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி 1வது மண்டலம் காங்ேகயநல்லூரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து விஐடி எதிரே பாதாள சாக்கடை பைப்லைன் அமைக்கும் பணிகள், சர்க்கார் தோப்புபகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அரியூரில் கட்டப்பட்டு வரும் ஸ்டடிசென்டரை ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.

இந்த அவகாசத்தை தாண்டினால், நிதி வழங்கப்படாது. மாநகராட்சி நிதியைத்தான் செலவுசெய்ய நேரிடும், எனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளவற்றை பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, டுபிட்கோ மேலாளர் முருகன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா, செயற்பொறியாளர் பார்வதி, உதவிபொறியாளர் ரமேஷ் உட்பட பலர் இருந்தனர்.

The post வேலூர் மாநகராட்சியில் மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: