வேலூரில் பழுதானதால் டிரைவருக்கு உதவினர் கர்நாடகா அரசு பஸ்சை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்த தமிழ்நாடு போலீசார்-தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 100 பேர் விரைவு

வேலூர் : கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பின்பேரில் தமிழக போலீசார் கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்து 100 போலீசார் நேற்று கர்நாடக மாநிலம் தும்கூருக்கு புறப்பட்டனர். இதற்காக வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் காலை 10 மணியளவில் போலீசார் காத்திருந்தனர். அவர்களை அழைத்து செல்வதற்காக கர்நாடகா மாநிலத்தின் 2 அரசு பஸ்கள் வந்தன. அவற்றில் போலீசார் ஏறி அமர்ந்தனர். அதில் ஒரு பஸ், ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை.

சுமார் 5 நிமிடமாக அதன் டிரைவர் ேபாராடியும் பலன் இல்லை.இதனால் செய்வதறியாமல் திகைத்த அதன் டிரைவர், ‘கொஞ்சம் தள்ளிவிட்டால் உடனடியாக ஸ்டார்ட் ஆகிவிடும்’ என கன்னட மொழியில் போலீசாரிடம் உதவி கோரினார். இதையடுத்து வேறு வழியின்றி 15க்கும் மேற்பட்ட போலீசார் இறங்கி பஸ்சை தள்ளிவிட்டனர். அதன் பின்னரே பஸ் ஸ்டார்ட் ஆனது. அதன்பின்னர் அவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

The post வேலூரில் பழுதானதால் டிரைவருக்கு உதவினர் கர்நாடகா அரசு பஸ்சை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்த தமிழ்நாடு போலீசார்-தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 100 பேர் விரைவு appeared first on Dinakaran.

Related Stories: