பல்வேறு வரலாற்று சுவடுகள் புதைந்துள்ள மண்ணான வேலூரில் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டை?

வேலூர் : பல்வேறு வரலாற்று சுவடுகள் புதைந்துள்ள மண்ணான வேலூரில், 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டை உள்ளது. அதனை ஆய்வு செய்ய 2 நாட்களில் வல்லுனர் குழு வருவதாக வரலாற்று ஆர்வலர் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியை சொந்த மாவட்டமாக கொண்டவர் அஸ்ரப் அலி(72), இவர் வேலூர் விருதம்பட்டு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் இயற்கை மீதும், வரலாற்று நிகழ்வுகள் மீதும் அதிகளவில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இதன்காரணமாக, வேலூரில் உள்ள சத்துவாச்சாரியில் கற்கால மனிதர்களின் கல் ஆயுதப்பட்டறை, கண்ணமங்கலத்தில் உள்ள சிங்கிரி கோயில், லத்தேரியில் அமைந்துள்ள கால பைரவர் மலையில் கற்கால மனிதர்களின் சுவடுகள், பூட்டு தாக்கு பகுதியில் உள்ள குரங்கு மலையில் சமனர்கள் வாழ்ந்த தடங்கள் என்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள வரலாற்று சுவடுகளை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். முன்பு வடஆற்காடு மாவட்டமாக திகழ்ந்து, தற்போதுள்ள மேற்கண்ட 4 மாவட்ட மக்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களாக அந்த புத்தகம் அடங்கியுள்ளது. இப்படி பல்வேறு வரலாற்று சுவடுகள் புதைந்துள்ள மண்ணான வேலூரில், சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தை காலத்தில் வாழ்ந்த ைடனோசரின் முட்டைகள் உள்ளதாக வரலாற்று ஆர்வலர் அஸ்ரப் அலி கூறுகிறார்.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் அஸ்ரப் அலி கூறியதாவது: வேலூர் அடுத்த விருதம்பட்டில் அண்ணாதெருவில் கால்வாய் ஓரத்தில் டைனோசர் முட்டை உள்ளது. இது பார்ப்பதற்கு பாைற போன்ற வடிவம் கொண்டதாக உள்ளது. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முட்டையை அரியலூருக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தேன். அங்கு ஆய்வு செய்யப்பட்டதில், டைனோசர்முட்டை தான் என்று உறுதி செய்தனர்.

தற்போது இங்குள்ள 2 முட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன்.
வேலூர் மாவட்டம் பல்வேறு வரலாற்று சுவடுகளை கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசர், தற்போது அதன் முட்டைகள் மீது மண் துகள்கள் சேர்ந்து பாறை போன்றதாக மாறியுள்ளது.

எனவே இந்த முட்டையை ஆய்வு செய்து, டைனோசர் முட்டையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். என்று கோரிக்கை வைத்தேன். இதனை ஆய்வுசெய்ய வல்லுநனர் குழுவினர் 2 நாட்களில் வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முழுவதுமாக ஆய்வு செய்து டைேனாசர் முட்டை தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேபோல், அப்பகுதிகளைச் சுற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாக்கப்படும் அரிய பொருட்கள்

வரலாற்று ஆர்வலரான முகமது அஸ்ரப் அலி வரலாற்று இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதுடன், சில அரிய பொருட்களை பாதுகாத்து வருகிறார். ராணிப்பேட்டை காஞ்சனகிரி மலையில் இருந்து கிடைத்த எமரால்டு கல். பகவதி மலையில் கிடைத்த கற்கால கோடாரி, பஞ்சபாண்டவர் மலையில் கிடைத்த தங்கம் புதைந்த கல். ராஜாக்கள் பயன்படுத்திய அதிக எடைகொண்ட சிங்க முகம் கொண்ட சிறிய கத்தி, ஊதுகுழல் என்று சிலவற்றை பாதுகாத்து வருகிறார்.

The post பல்வேறு வரலாற்று சுவடுகள் புதைந்துள்ள மண்ணான வேலூரில் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டை? appeared first on Dinakaran.

Related Stories: