விஏஓ-க்களுக்கு பாதுகாப்பு.. சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: விஏஓ-க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை தடுத்து வருகிறோம் என்றும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை 12,500 வி.ஏ.ஓ.க்கள் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த தூத்துக்குடி-கோவில்பத்து விஏஓ பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார். ஆனால், கொலை செய்யப்பட்ட பின்பு இழப்பீடு வழங்குவதால் எந்த பயனும் இல்லை என மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர்-மருத்துவமனை தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றியதை போல விஏஓ பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற உத்தராவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த இன்று விசாரணைக்கு வந்த போது சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post விஏஓ-க்களுக்கு பாதுகாப்பு.. சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: