உளுத்தம் பருப்பு – 1 டம்ளர்
தண்ணீர் – 5 டம்ளர்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சுக்குத் தூள் – 1/4 டீஸ்பூன்
கருப்பட்டி பாகு – சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் – 1 1/2
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதைக் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 5 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஓரளவு குளிர வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உளுத்தம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அரைத்த உளுத்தம் பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, எடுத்து வைத்துள்ள நீர் முழுவதையும் சேர்த்து தொடர்ந்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும். மாவானது நன்கு நுரை விட்டு கொதிக்க ஆரம்பிக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதை உணர்ந்தால், சிறிது நீரை ஊற்றி, தொடர்ந்து கிளறி வேக வைக்க வேண்டும். முக்கியமாக அடிபிடிக்க விடாதீர்கள். இப்படி ஒரு அரை மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது நுரை அடங்கி, நன்கு நீர் போன்று காணப்படும். இந்நிலையில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் கருப்பட்டி பாகுவை சுவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான உளுந்தம் பால் தயார்.
The post உளுத்தம் பால் appeared first on Dinakaran.