ராகி பிஸ்கட்

தேவையான பொருட்கள்:

பாதம் – 10
முந்திரி – 20
நிலக்கடலை – ¼ கப்
பிஸ்தா – 10
வால்நட் – 5
வெண்ணெய் – ½ கப்
நாட்டு சர்க்கரை – ½ கப்
ராகி மாவு – 1 கப்
பேக்கிங் சோடா – ஒரு பின்ச்
ஏலக்காய் – 3
பால் – ¼ கப்
உப்பு – ¼ டீ ஸ்பூன்

பேக்கிங் செய்ய:-

அகலமான பாத்திரம் மூடியுடன்
பிரஷர் குக்கர் ஸ்டாண்ட்
கல் உப்பு
பால் பாக்கெட் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பர்

செய்முறை:

பாதம் பருப்பை 3-4 மணி நேரம் நன்றாக ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து நிலக்கடலையை லேசாக கருகாமல் வறுத்து தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.அடுத்து வாணலியில் பாதம், முந்திரி, பிஸ்தா, வால்நட் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.பின் ராகி மாவை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்து கொள்ளவும்.- வறுத்த ராகி மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும்.அதனுடன் நாட்டு சர்க்கரை ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின் மிக்ஸி ஜாரில் பாதம், முந்திரி, பிஸ்தா, வால்நட், தோல் நீக்கிய நிலக்கடலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.அரைத்ததை நன்றாக சலித்து வெண்ணை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து கலக்கவும்.சலித்ததில் மீதம் இருப்பவற்றை மீண்டும் அரைத்து சலித்து சேர்த்து கொள்ளவும்.வறுத்து ஆற வைத்த ராகி மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சலித்து வெண்ணை நாட்டுசர்க்கரை கரைசலில் சேர்க்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.பின் பைப்பிங் பேக் அல்லது பால் கவரின் நுனியை வெட்டி தயார் செய்து கொள்ளவும்.அகலமான அடி கனமான பாத்திரத்தின் அடி பகுதியில் உப்பு சேர்த்து அதன் மீது ஸ்டாண்டை வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.பின் ஒரு தட்டில் பட்டர் அல்லது நெய் தடவவும்.பின் இந்த கலவையை பால் கவரில் வைத்து நீங்கள் விரும்பும் வடிவத்தில் கொஞ்சம் தடிமனாக நெய் தடவிய பிஸ்கட் போல போடவும்.பின் தட்டை வாணயில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கெட் ரெடி!

The post ராகி பிஸ்கட் appeared first on Dinakaran.