கருணைக்கிழங்கு லைம் மசியல்

தேவையானவை:

கருணைக்கிழங்கு – 4 (நடுத்தர அளவு),
பெரிய வெங்காயம் – 1,
எலுமிச்சம்பழம் – பாதிமூடி,
பச்சை மிளகாய் – 4,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
சோம்பு – சிறிது,
கறிவேப்பிலை – 1ஆர்க்கு,
எண்ணெய் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 1.

செய்முறை:

கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். எலுமிச்சம்பழத்துடன் மஞ்சள் தூள், 1 டம்ளர் தண்ணீர் கலந்து,அதில் மசித்த கிழங்கை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கரைத்த கிழங்கு மசாலாவை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். கிழங்குவெந்து அடிப்பிடிக்காமல் சுருள வெந்ததும் இறக்கி பரிமாறவும். செட்டிநாட்டில் மிக பிரபலமான அயிட்டம் இது.

The post கருணைக்கிழங்கு லைம் மசியல் appeared first on Dinakaran.