×

தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்தவர்களே: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை : நாட்டிலேயே சிறந்த கல்வி முறை தமிழ்நாடு பாடத்திட்டத்தில்தான் உள்ளது என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வண்டலூரில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி,”முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களின் நலன்களில் கவனம் செலுத்தி வருகிறார். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். உயர்கல்வி படிக்கும் அத்தனை பேருக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே காரணம். கலைஞரின் முதல் பணியே ஆசிரியர் பணிதான். மாணவ நேசன் பத்திரிகையை தொடங்கியவர் கலைஞர். ஆசிரியர்கள் மீது எப்போதுமே திமுகவுக்கு அக்கறை உண்டு. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்டவை திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனில் ஆசிரியர் போல சிந்தித்து திட்டங்களை வகுக்கிறார். மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிந்திக்க வைக்கின்றன, ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. தமிழ்நாட்டின் கல்விமுறையை யாரும் குறை சொல்வதை ஏற்க முடியாது. அப்படி குறை சொன்னால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் உயர் பொறுப்புகளில் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாக பணியாற்றியுள்ளனர்.பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பாடதிட்டத்தை குறைசொல்கிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்தவர்களே: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Sports ,Udayaniti Stalin ,Teacher's Day Award Ceremony ,Vandalur ,Udayanidhi ,Chief Minister ,Government ,Minister Assistant ,Stalin ,Governor ,
× RELATED திராவிட மாடலின் அடித்தளமாக திகழும்...