×

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு சந்தைகளில் மட்டுமே கிடைத்து வந்த போதைப்பொருட்கள் கூட இப்போது குக்கிராமங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. வருங்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டுமானால், கஞ்சா கட்டமைப்பை தகர்ப்பதுதான் முதன்மைத் தேவை ஆகும். எனவே, காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

The post போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,DGB ,Chennai ,Palamaka ,United States ,Africa ,Ramdas ,Dinakaran ,
× RELATED மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை...