உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையால் உதயநிதிக்கு பெருமையும், உதயநிதியால் விளையாட்டுத்துறைக்கு சிறப்பும் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்ல்கில் நடைபெற்ற ‘களம் நமதே’ முதலமைச்சர் கோப்பை-2023’ நிறைவு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; “விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்த பிள்ளையை பார்த்து சிலர் நினைப்பது உண்டு.

விளையாட்டு வீரர்களோடு எப்போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். விளையாட்டு துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களை சிறப்பாக நடத்துவோம் என்பதற்கு எடுத்துகாட்டு முதலமைச்சர் கோப்பை தொடர்.

மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவில் வெற்றிக்காக உழைக்க வேண்டும். மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவில் வெற்றிக்காக உழைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் இந்தியாவுக்காகத்தான் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் INDIA அணிதான். அந்த வெற்றிக்காகத் தான் நாங்களும் ஒருங்கிணைந்து Team Spirit உடன் பாடுபடுகிறோம். பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 10 விதமான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் விளையாட்டு துறையின் வளர்ச்சி பெருமையளிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது தான் முதலமைச்சர் கோப்பை குறித்து அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பையில் 3.7 லட்சம் பேர் பங்கேற்றதை வெற்றியாக கருதுகிறேன். அணி கூட்டுழைப்பை உருவாக்குவதில் தமிழக விளையாட்டுத்துறை வெற்றி அடைந்துள்ளது. விளையாட்டியில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல, சளைக்காமல் பங்கேற்பதே முக்கியம். போட்டிகளில் பரிசுகளை வழங்குவதோடு மட்டும் அரசின் கடமை முடிந்துவிடாது. விளையாட்டு வீரர்களை மதித்து, நல்ல சூழலை உருவாக்கி தருவதும் அரசின் கடமை என்று கூறியுள்ளார்.

The post உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு! appeared first on Dinakaran.

Related Stories: