அந்த நிபுணர் குழுவில் ஐ.ஐ.டி., தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய பிரதிநிதிகளும், தேசிய அளவில் புகழ் பெற்ற சுற்றுசூழல் நிபுணர்களும் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை அமைந்திருப்பது சரியா என்றும், சரி என்றால் அந்த காப்பர் ஆலையை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் எவை, கடத்த காலங்களில் ஏதேனும் சுற்றுசூழல் மீறப்பட்டுள்ளதா?. அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அதற்கான எவ்வளவு அபராதம் தொகை விதிக்க வேண்டும் என்ற விவரங்களை அந்த நிபுணர் குழு ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று யோசனையை நேற்று வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய யோசனையை வேதாந்தா நிறுவனம் ஏற்று கொண்டது. ஆனால் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து இது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என்று கருத்து தெரிவித்து இருந்தது. எனவே இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது உத்தரவிட்டுள்ளது.
The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு: இறுதி விசாரணையை வரும் 20ல் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.