திருச்சி அருகே நள்ளிரவு லாரி மீது அரசு பஸ் பயங்கர மோதல்

*12 மாணவர்கள் உள்பட 26 பேர் படுகாயம்

திருச்சி : திருச்சி அருகே முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் இரவு 11.15 மணியளவில் விழுப்புரம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் புறப்பட்டது.

இந்த பஸ்சை காஞ்சிபுரத்தை சேர்ந்த சுந்தர்சி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் இருந்தார். அப்போது நள்ளிரவு 12.15 மணியளவில் சமயபுரம் அடுத்த சிறுகனூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ் டிரைவருக்கு இரண்டு கால் எலும்புகளும், கண்டக்டருக்கு ஒரு கால் எலும்பும், சிறுவனுக்கு கை எலும்பு முறிவும் ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற சென்னையை சேர்ந்த 12மாணவர்கள் மற்றும் 3 பயணிகள் உள்பட மொத்தம் 26 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு இருங்களுரில் உள்ள தனியார் மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் மற்றும் லாரியை சாலையில் இருந்து கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி அருகே நள்ளிரவு லாரி மீது அரசு பஸ் பயங்கர மோதல் appeared first on Dinakaran.

Related Stories: