ரயில்களில் திருநங்கைகள் தொல்லை; தடுத்து நிறுத்த பயணிகள் கோரிக்கை: போலீசார் அழைத்து அறிவுரை

திருவள்ளூர்: சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அப்போது பணம் கொடுக்காதவர்களை ஆபாசமாக பேசுவதுடன் பயணிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சில சமயங்களில் அத்துமீறி நடந்துக்கொள்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீஞ்சூர் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தார். திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ஒரு திருநங்கை ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது ரயிலில் சிக்கி கால்கள் துண்டானது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரூ விரைவு வண்டிசிக்னலுக்காக நின்றபோது ஒரு பெட்டியில் பயணியிடம் இருந்து திருநங்கைகள் 2 பேர் அவருடைய பாக்கெட்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்து தப்பினர்.

கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஜார்க்கண்டில் இருந்து பெரம்பூருக்கு வந்த விரைவு வண்டியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு பயணியிடம் ரூ.15 ஆயிரம் காணாமல்போனது. இவ்வாறு ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுசம்பந்தமாக தொடாந்து புகார்கள் வந்ததையடுத்து இருப்புப் பாதை காவல் துறை கூடுதல் இயக்குனர் வி. வனிதா உத்தரவின்படி, சென்னை எஸ்பி.வி. பொன்ராமு திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா, சகிதா ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை மீறி புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

The post ரயில்களில் திருநங்கைகள் தொல்லை; தடுத்து நிறுத்த பயணிகள் கோரிக்கை: போலீசார் அழைத்து அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: