புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி: தீபாவளியையொட்டி புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் புதுச்சேரி நகருக்குள் குறிப்பிட்ட சாலைகளில் கனரசு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: