தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

 

ராயக்கோட்டை, ஜூலை 29: ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலில் செடிகளுக்கு குச்சி நட்டுள்ள விவசாயிகள், 20 நாட்களில் புதிய தக்காளி அறுவடைக்கு வரும் என தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள மண்டிகளில் இருந்து பெங்களூரு, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை கிலோ 100 முதல் அதிகபட்சமாக 140 வரையிலும் விற்பனையாகி வருகிறது. இதையடுத்து ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

நிலத்தை சமன் செய்து சொட்டுநீர் பாசன குழாய்களை பதித்து, மல்ச்சிங்சீட் பேப்பரை கெண்டு மூடி தக்காளி நாற்று நட்டு, செடிகளை வளர்த்து வருகின்றனர். இந்த செடிகள் நன்கு வளர்ந்து தற்போது காய்கள் பிடித்துள்ளது. இதையடுத்து செடிகளை படரவிட குச்சிகளுக்கு அருகில் கம்பு நட்டு பந்தல் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏக்கருக்கு 2500 குச்சிகள் நட்டுள்ளனர். இந்த குச்சியை ₹30 விலைக்கு வாங்கி 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொத்து கொத்தாய் காய்கள் பிடிக்கும் தக்காளி செடிகள், மண்ணில் விழுந்து சேதமாவது தடுக்கப்படும். இந்த முறையில் ஒரு ஏக்கரில் தக்காளியை சாகுபடி செய்ய ₹2 லட்சம் வரை செலவு ஆகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: