இந்நிலையில், நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடுவது வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனால் அந்த சிறுத்தையை பிடிக்கும் வரை வனப்பகுதியில் ஆபரேஷன் சிறுத்தை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைப்பாதையில் 7வது மைல் அருகே சிறுத்தை வந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 5வது சிறுத்தையும் கூண்டில் சிக்கியது.
மேலும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்: திருமலையில் உள்ள ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு சிறுத்தையும், பக்தர்கள் நடந்து வரும் நடைபாதையில் உள்ள வனப்பகுதியில் மற்றொரு சிறுத்தையும் என மேலும் 2 சிறுத்தைகள் நடமாடுவது கண்காணிப்பு கேமராவில் தற்போது பதிவாகி உள்ளது.
The post திருப்பதி நடைபாதையில் 5வது சிறுத்தை கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.
