மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை ஏற்படுவதாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தண்டபாணி அதிருப்தி தெரிவித்துள்ளார். நீர்நிலைக்குள் மண்ணை கொட்டி கட்டுமான பணி மேற்கொண்டால் திட்டமதிப்பீடு குறையும் என்றார் ஒப்பந்ததாரர். ஒப்பந்ததாரர் என்னிடம் கூறிய வார்த்தை அதிர்ச்சி அளிக்கிறது. கண்மாயை பாதிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள முடியுமா? கண்மாயை பாதிக்காதவாறு மேம்பாலம் கட்டப்படும் என அறிக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றம் பரிசீலிக்கும். கண்மாயை பாதிக்கும் வகையில் மேம்பாலப் பணிகளை மேற்கொண்டால் அனுமதி வழங்க இயலாது. கண்மாயை பாதிக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி தண்டபாணி மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் – கோமதிபுரம் வரை ரூ.150.28 கோடியில் மேம்பாலம் கட்ட தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
The post நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி appeared first on Dinakaran.