உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் ‘ஐகான் ஆப் தி சீஸ்’.. மியாமி துறைமுகத்தில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது!!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பலான ‘ஐகான் ஆப் தி சீஸ்’ அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள மியாமில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கரும்பச்சை கடற்பரப்பில் நகரும் இந்த பிரமாண்டமான கப்பல் 1198 அடி நீளம் கொண்டதாகும். 20 அடுக்குகள் கொண்ட கடல்நீரில் நகர்ந்து செல்லும் மிதக்கும் மாடமாளிகையில் ஒரே நேரத்தில் 10,000 பயணிகள் வரை செல்லலாம். இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,700 கோடி செலவில் அதிசய அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஐகான் ஆப் தி சீஸ்’ சொகுசு கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள், மது கூடங்கள் மற்றும் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் 7 நாட்கள் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி பயணம் செய்ய உள்ளது.

The post உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் ‘ஐகான் ஆப் தி சீஸ்’.. மியாமி துறைமுகத்தில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: