×

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,ICourt ,CHENNAI ,Madras High Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக்...