ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை

தேவையானவை :

மரவள்ளிக் கிழங்கு – கால் கிலோ,
பச்சை மிளகாய் – 2,
ஊற வைத்த கடலைப் பருப்பு – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

மரவள்ளிக் கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.வாணலியில் எண்ணெயைக் காய விட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான மொறு மொறு மரவள்ளிக் கிழங்கு வடை தயார். மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்கு மட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர் கொண்டு வருகிறது.இப்படி பள்ளி நன்மைகள் இருக்கும் போது இந்த மரவள்ளிக் கிழங்கை வைத்து மசால் வடை செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு புறம் நன்றாக சிவந்ததும், திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு அரைத்த மாவுடன் உப்பு, மிளகு, இஞ்சி சேர்த்ததும் தனியாக எடுத்து பகோடா போல் அல்லது சிறு வடைகளாக தட்டி பொரிக்கலாம்.

The post ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை appeared first on Dinakaran.