வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை:

வாழைக்காய் – 2,
உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உளுந்து மாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து சிவந்ததும் எடுக்கவும்.

The post வாழைக்காய் தேன்குழல் appeared first on Dinakaran.