கேள்வி கேட்டால் ரெய்டா?: தமிழகத்திற்கு நிதி தராத ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. மதுரையில் கனிமொழி பரப்புரை..!!

மதுரை: தமிழகத்திற்கு நிதி தராத ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக கனிமொழி வாக்கு சேகரித்தார். பரப்புரையில் பேசிய அவர், பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை செய்து வருகிறது. பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை மதிப்பதும் கிடையாது. பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களை அர்பன் நக்சல் எனக் கூறுகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினால் சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறையை ஏவி விடுகின்றனர்.

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தர முடியாது என்கிறார்கள். ஆனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள் என்று காட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி, ரூ.65,000 கோடிக்கு மேல் கார்ப்ரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். ஆனால், விவசாயிகள் கடனை ரத்து செய்யச் சொன்னால் கேட்க மாட்டார்கள். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் மத்திய அமைச்சர் அமித்ஷா பக்கோடா போடச் செல்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்க பிரதமருக்கு தைரியம் உண்டா? என்று சாடினார்.

இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்திற்கு நிதி தராத ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி ஆவேசமாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அம்பானி, அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும் என்றார்.

The post கேள்வி கேட்டால் ரெய்டா?: தமிழகத்திற்கு நிதி தராத ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. மதுரையில் கனிமொழி பரப்புரை..!! appeared first on Dinakaran.

Related Stories: