தமிழக எம்பிக்கள் டெங்குவால் பாதிப்பு நாடாளுமன்றத்தில் கொசு மருந்து அடிக்காத ஆட்சிதான் பாஜ ஆட்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. டெங்கு பொல்லாத நோய், பாஜ ஆட்சியில் யோகியர்கள் போல் பேசுகிறார்கள், நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு எம்பிக்கள் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் வந்து விட்டது.

நாடாளுமன்றத்தில் கொசு கடித்து, தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலேயே கொசு மருந்து அடிக்காத ஆட்சிதான் பாஜ ஆட்சி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா உட்பட நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்ற அனைத்து எம்பிகளுக்கும் டெங்குவால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் டெங்குவை தடுப்பதற்கான முழு முயற்சியையும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழக எம்பிக்கள் டெங்குவால் பாதிப்பு நாடாளுமன்றத்தில் கொசு மருந்து அடிக்காத ஆட்சிதான் பாஜ ஆட்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: