வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நெல், காய்கறி பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி குமரன் (32). இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் நடவு செய்துள்ளார். நடவு செய்த நாள் முதல் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் உஷ்ணம் தாங்காமல் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர் கருகியுள்ளது.

இதேபோன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் வெயிலின் உக்கிரம் தாங்காமல் நெல் மற்றும் காய்கரி பயிர்கள் கருகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகள் தொடர்ந்து தொய்வின்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள உதவியாக வேளாண்மைத்துறை மூலம் மாவட்ட நெல் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்து வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: