தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

மதுரை: தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, டிஎஸ்பி சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தாமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: