தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் வயதான வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்திற்கு வழக்கறிஞர் கே.பாலு கொண்டுவந்தார்.
இந்த முறையீடு தொடர்பாக இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில்; கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் சட்ட ரீதியாக தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகருக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
The post தமிழ் வழக்காடு மொழி வழக்கு.. நீதிமன்றம் தலையிட முடியாது; தமிழக அரசிடம் கொண்டு செல்லுங்கள்.. ஐகோர்ட் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.