மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதியாக இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.
The post முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன்!.. appeared first on Dinakaran.