கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வழங்கக்கூடாது?.. தேர்தல் ஆணைய பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சி சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில் அங்கிகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியதை எதிர்த்து நா.த.க. தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது; நா.த.க. கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; கடந்த தேர்தல்களில் கரும்பு சின்னத்தில் போட்டியிட்டு கணிகமான வாக்குகளை பெற்றுள்ளோம். கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். தொடர்ந்து பேசிய நீதிபதி; கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணைய பதிலளிக்க உத்தவிட்டார். மேலும் ஹோலி விடுமுறைக்குப் பின் நாம் தமிழர் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

The post கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வழங்கக்கூடாது?.. தேர்தல் ஆணைய பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: