தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீலகிரி, கோவை, தேனியில் கனமழை தொடரும்: பிரதீப் ஜான்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, வால்பாறை, அப்பர் பவானி, சின்னக்கலாறில் மிக மிக பலத்த மழை பெய்துள்ளது. சின்கோனா, சோலையாறு, நீலகிரி மாவட்டம் எமரால்டு உள்பட 5 இடங்களில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அப்பர் பவானி பகுதியில் 24.8 செ.மீ மழையும், எமரால்டு பகுதியில் 13.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சேரங்கோட்டில் 11.3 செ.மீ, மேல்கூடலூரில் 10.8, பந்தலூரில் 9.2, ஓவேலியில் 8.8, பாடந்துறையில் 8.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நெல்லை நாலுமுக்கு 10 செ.மீ., ஊத்து பகுதியில் 8.8 செ.மீ., காக்காச்சியில் 6.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும்.

சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக கிடைத்துள்ளது. 120 நாளில் கிடைக்க வேண்டிய மழை முதல் 40 நாட்களிலேயே கிடைத்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறினார்.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீலகிரி, கோவை, தேனியில் கனமழை தொடரும்: பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Related Stories: