×
Saravana Stores

சிறிய புனல் மின் திட்ட கொள்கைகக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சிறிய புனல் மின் திட்ட கொள்கைகக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்முலம் தனியார் நிறுவனங்கள் சுற்றுசூலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த முடியும். சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்கள் ஆகும். இத்திட்டம் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க, மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இயலும். நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் நிலக்கரி, எரிவாயு இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள், நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பு திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 10% தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

The post சிறிய புனல் மின் திட்ட கொள்கைகக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி,...