சீதை, அக்பர் சர்ச்சை விவகாரம் இரு சிங்கங்களின்பெயரை மாற்றுங்கள்: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியல் பூங்காவில், ஒரே இடத்தில் இருக்கும் ஆண், பெண் சிங்கத்திற்கு அக்பர், சீதை என பெயரிடப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. இதை எதிர்த்து விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுவதற்கு முன்பாக பெண் சிங்கத்திற்கு சீதை என பெயரிடப்பட்டிருந்ததாக மேற்கு வங்க வனத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘நீங்கள் பொதுநலத்தை காக்கும் மதச்சார்ப்பற்ற அரசு. அப்படியிருக்கையில் ஏன் சிங்கங்களுக்கு அக்பர், சீதை என பெயரிடுகிறீர்கள். திரிபுராவில் இருந்து கொண்டு வரும் போதே இந்த பெயர் இருந்தாலும், அதை மாற்றியிருந்தால் சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.

சிங்கங்களுக்கு எதற்காக கடவுள், சுதந்திர போராட்ட வீரர், மன்னர்கள் பெயரை சூட்டுகிறீர்கள்? சிங்கத்திற்கு சீதை மட்டுமல்ல அக்பர் என பெயரிட்டதையும் ஏற்க முடியாதது. எனவே பெயரை மாற்றி சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்’’ என கேட்டுக் கொண்டு, வழக்கை பொதுநல மனுவாக மாற்றி தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

The post சீதை, அக்பர் சர்ச்சை விவகாரம் இரு சிங்கங்களின்பெயரை மாற்றுங்கள்: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: