* கோவாவில் அக்.26ம் தேதி தொடங்கிய 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று முடிந்தன. அதில் தமிழ் நாடு 19தங்கம், 26வெள்ளி, 32வெண்கலம் என மொத்தம் 77 பதக்கங்களுடன் 10வது இடத்தை பிடித்தது. மகாராஷ்டிரா 80தங்கம், 69வெள்ளி, 79வெண்கலம் என மொத்தம் 228 பதக்கங்களை அள்ளி முதல் இடத்தில் உள்ளது. ராணுவத் துறைகளை உள்ளடக்கிய சர்வீசஸ் அணி 66 தங்கம், 27வெள்ளி, 33 ெவண்கலம் என 126 பதக்கங்களை கைப்பற்றி 2வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து அரியானா, மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், டெல்லி, கோவா அணிகள் முறையே 3 முதல் 9வரையிலான இடங்களை பெற்றுள்ளன. புதுச்சேரி 2 வெள்ளி, 5வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 31வது இடத்தை பிடித்தது.
* அகில இந்திய அளவில் நடைபெற்ற 71வது முதுநிலை தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழ் நாடு மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதனால் தமிழ் நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அணியில் இடம் பெற்ற வீராங்கனைகள் அனைவருக்கும் தலா ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளது. அதில் 5பேர் எம்ஓபி வைணவ மகளிர் கல்லூரியின் இந்நாள், முன்னாள் மாணவிகள்.
* உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளர் பதவியை விட்டு முன்னாள் இன்சாம் உல் ஹக் விலகினார். அவர் விலகலை, வாரியம் ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்துள்ளது.
* டைம் அவுட் நாயகர் ஏஞ்சலோ மேத்யூஸ்(இலங்கை) நேற்று களமிறங்கிய போது, நியூசி கேப்டன் கேன் வில்லியம்சன், ‘ஹெல்மட் சரியாக இருக்கிறதா பார்த்து விட்டீர்களா’ என்று கேட்கும் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகியது.
The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.