The post ஷேர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் இழந்தவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
ஷேர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் இழந்தவர் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: கொடுங்கையூர் ஸ்ரீராம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் பவுல்ராஜ் (41). ஆன்லைன் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது. மோகன் பவுல்ராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், ஷேர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.