செம்பரம்பாக்கம் ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரி மற்றும் ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ சாஸ்தா கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் பேராசிரியர் ஜெ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரி முதல்வர் விமலா அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையின் எஃப் மற்றும் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் சொசைட்டியின் திட்ட இயக்குனர், விஞ்ஞானி கே.மௌருகயனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்தவர்களுக்கும், கல்லூரி அளவில் முதல் இடம் மற்றும் ஒவ்வொரு துறை அளவில் முதலிடம் எடுத்தவர்களுக்கும் வெள்ளிப் பதக்கங்களையும், இளநிலை இன்ஜினியரிங், முதுநிலை இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: இன்று பட்டம் பெரும் மாணவர்களாகிய நீங்கள் தற்பொழுதுதான் முதல் படியில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். தொடர்ந்து நீங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post செம்பரம்பாக்கம் ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: