சாமை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

சாமை அரிசி 2கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கல் உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி 1 பெரிய துண்டு துருவியது
தண்ணீர் – நான்கு கப்
தேங்காய் எண்ணெய் – இரண்டு
டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் கால் கப் பயத்தம் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம். அதை அரை மணி நேரம் ஊற வைத்துதண்ணீர் கொதிக்கும்போது சேர்த்து கிளறவும். இப்பொழுது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலைப் பருப்பு சேர்த்து சீரகமும் சேர்த்து வறுத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது நான்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும். அது நன்கு வெந்து இருக்கும்.இப்பொழுது இட்லிப் பானையில் வேகவைக்கும் தட்டில் பிடி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சாமை அரிசி பிடி
கொழுக்கட்டை தயார்.

 

The post சாமை கொழுக்கட்டை appeared first on Dinakaran.