சேலம்: சேலம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 165 கன அடியில் இருந்து 119 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.91 அடியிலிருந்து 66.86 அடியாக சரிந்துள்ளது, நீர் இருப்பு 30.06 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.