இதன் துவக்கமாக, இன்று (20.07.2024), சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலை (மாந்தோப்பு) பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெருமக்கள், 10 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி 2024 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்டத்தினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சா.விஜயராஜ்குமார்.
இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தி.ந.வெங்கடேஷ், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் வா.சம்பத், இ.ஆ.ப., சிறுபான்மையினர் நல இயக்குநர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பெருநகர சென்னை மாநகராட்சி (தெற்கு) மண்டல துணை ஆணையர் பிரவீன்குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், சுப்பரமணி, மோகன் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்..!! appeared first on Dinakaran.