அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை எழும்பூர் – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – கோட்டயம் (06117) இடையே டிசம்பர்.18, ஜன.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.45-க்கு புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 1.10-க்கு ரயில் கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கோட்டயம் – எழும்பூர் (06118) டிச.19, ஜன.2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கோட்டயத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 10.30-க்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை எழும்பூர் – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.