முட்டை ஏற்றுமதிக்கு திடீர் நெருக்கடி

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் தற்போது 1200 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் சுமார் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள், தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 2.50 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவுக்கு தினமும் 1.75 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுதவிர ஓமன், துபாய், பக்ரைன், கத்தார் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும் சராசரியாக 24 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டு அரசாங்கம், முட்டை இறக்குமதியில் புதிய கொள்கையை நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முட்டைகளின் அளவினை பொறுத்து ஏஏ, ஏ, பி, சி என 4 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏஏ முட்டைகள் 70 கிராம், ஏ வகை 60 கிராம் முதல் 69 கிராம் வரை. 50 கிராம் எடையுள்ள முட்டைகள் பி வகையும், 50 கிராமுக்கு கீழ் உள்ளவை சி எனவும் கத்தார் நாடு அறிவித்துள்ளது. இந்த வகையில், கத்தார் நாடு, ஏஏ மற்றும் ஏ என இரண்டு வகை முட்டைகளை மட்டுமே, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

The post முட்டை ஏற்றுமதிக்கு திடீர் நெருக்கடி appeared first on Dinakaran.

Related Stories: