அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி தொடங்கும் புதிய சீசனுக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரராக களமிறங்க உள்ளார். தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு விளையாடும் முதல் போட்டியாக SA20 இருக்கும். இந்தியாவுக்காக 180 சர்வதேச போட்டிகளில் விளையாடிய கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடினார்.
கடந்த ஐபில் சீசனோடு அவர் ஒய்வு பெற்ற நிலையில் அவரை ஒரு வழிகாட்டி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல்லில், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை போன்ற ஆறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் இரண்டு போட்டிகளை மட்டுமே தினேஷ் கார்த்திக் தவறவிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு, அம்பதி ராயுடு CPLஇல் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடினார். ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ILT20யில் துபாய் கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அபுதாபி டி10 போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடினார். அந்த வகையில் SA20ல் பார்ல் ராயல்ஸ் அணிக்காக முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளார். SA20 வரலாற்றில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் தினேஷ் கார்த்திக் பெற உள்ளார்.
பார்ல் ராயல்ஸ் அணி: டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பிஜோர்ன் ஃபோர்டுயின், அண்டில் பெஹ்லுக்வாயோ, தினேஷ் கார்த்திக், மிட்செல் வான் ப்யூரன், கோடி யூசுஃப், கீத் டட்ஜியன், நகாபா பீட்டர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், தயான் கலீம்
The post SA20ல் பார்ல் ராயல்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார் முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் appeared first on Dinakaran.