இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த 20ம்தேதி கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி தேவி தலைமையிலான போலீசார் கடந்த 2 நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று மதியம் 2 மணிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு வாரம் காவலில் விசாரிக்க வாங்கல் போலீசார் மனு அளித்தனர். மாலை 6 மணி வரை இந்த மனு மீதான விசாரணை நடந்தது. ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி பரத்குமார், இன்று மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து வாங்கல் போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரவு 7.30 மணியளவில் வாங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.