70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!!

டெல்லி : ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அடுத்த கட்டமாக 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். கடந்த அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழாவை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார் .இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் 10,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 4,30,000 நபர்களுக்கு பணி நியமனக் ஆணையை வழங்கியுள்ளார்

இதன் தொடர்ச்சியாக 70,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகளவில் இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது. வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது.9 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்தது. கடந்த ஆட்சியில் நமது நாட்டின் வங்கித்துறை அழிவை சந்தித்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். வளர்ச்சியின் பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கும் போது, அரசு ஊழியராக இருப்பது நல்ல வாய்ப்பு,”என்றார்.

The post 70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!! appeared first on Dinakaran.

Related Stories: