ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன்: ஹேமந்த் சோரன் பேட்டி

ராஞ்சி: ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன் என ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விழாவை புறக்கணிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், வந்தால் விழாவில் பங்கேற்பேன் என்றும் கூறினார். மத நம்பிக்கை கொண்ட தான், கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதாகவும் கூறினார்.

The post ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன்: ஹேமந்த் சோரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: