அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அயோத்தியில் சிறிய அளவிலான விமான நிலையம் இருந்து வந்த நிலையில் தற்போது மரியதா புருஷோத்தம் ராம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ‘‘அயோத்தியில் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு 821 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளது. விமான நிலைய கட்டுமான பணிகள் இம்மாதம் 15ம் தேதிக்குள் நிறைவடையும்” என்று கூறினார்.
The post ஜனவரி 22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அயோத்தி சர்வதேச ஏர்போர்ட் பணிகள் டிச.15க்குள் முடியும்: முதல்வர் யோகி உறுதி appeared first on Dinakaran.