பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அசோக் கெலாட் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘இதுபோன்ற சம்பவங்களுக்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெண்ணின் கணவர் கன்ஹா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கன்ஹா உட்பட தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவானர்களை கைது செய்வதற்காக 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ராஜஸ்தானில் பரபரப்பு சம்பவம்; பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: கணவர் உட்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.
