ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,969 கோடி நிதி ஒதுக்கவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர்.

The post ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: